மதுக் கடைகள், பஸ், பள்ளிகள், தியேட்டர்கள் திறக்கப்படும் போது, விநாயகர் சதுர்த்தி(Ganesha Chaturthi)யை மட்டும் தடை செய்வது ஏன்? என நடிகையும், பா.ஜ.க, பிரமுகருமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, விநாயகர் சதுர்த்தி, உதயநிதிக்கு வெறும் ஒரு மண் பொம்மையாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு ஹிந்துகளும் நம்பும் கலாசாரம், பண்பாடு, உணர்வு. அதனால் ஒற்றுமையுடன், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகிறோம். கோடிக்கணக்கான தமிழ் மக்களை காயப்படுத்த, தீய கொள்கையை மக்களிடம் தி.மு.க., திணிக்கிறது. அரசின் நடவடிக்கை, விநாயகர் சிலைகளை செய்பவர்களையும், கொண்டாடும் பல கலைஞர்களையும் பாதிக்கிறது.
இது, அவர்களின் வயிற்றை அடிக்கிறது . ஹிந்துக்களின் ஒற்றுமையை உடைத்து அவர்களின் மனநிலையை கெடுக்க, தி.மு.க., முயல்கிறது. டாஸ்மாக் கடை, பஸ், பள்ளிகள், தியேட்டர்கள் மற்றும் பிற பொது இடங்கள் திறக்கப்படும் போது, விநாயகர் சதுர்த்தியை மட்டும் தடை செய்வது ஏன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.