திசை (Direction Yoga) நடத்தும் கிரகம்,
- திசை (Direction Yoga) நடத்தும் கிரகம், முதலில் லக்னத்திற்கு என்ன ஆதிபத்தியம் பெறுகிறது, என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.
- தசாநாதன் லக்னாதிபதிக்கு பகையா அல்லது நட்பா என்பதை பொருத்து பலன்கள்.
- திசை நடத்தும் கிரகம் பாவ கிரகமாக இருக்கும் பொழுது அவை 6 எட்டாம் பாவத்தில் மறைந்து சுபர் தொடர்பு பெற்றிருத்தல் அவசியம்.
- திசை நடத்தும் கிரகத்தினை எந்தெந்த கிரகங்கள் தொடர்பு கொள்கின்றன எந்த கிரகத்துடன் அவை இணைந்துள்ளன அதனுடைய ஆதிபத்தியம் காரகத்துவம் ரீதியான பலன்களையும் ஆராய்தல் அவசியம்.
- தசாநாதன் பாவகிரகமாக இருக்கும் பொழுது எந்த நிலையிலும் ,சுபர் தொடர்பு பெற்றிருந்து சுபத்தன்மை அடைந்தால் மட்டுமே திசை சிறப்பிக்கும்.
- திசை நடத்தும் கிரகம், சுப கிரகமாக இருந்தாலும் அது முதலில் என்ன ஆதிபத்தியம் வாங்குகிறது என்பதை கவனித்தல் அவசியம்.
- சாரநாதன் மற்றும் வீடு கொடுத்தவன் நிலை, வீடு கொடுத்தவன் தசா நாதனுக்கு மறையாமலும் ஆட்சி உச்சம் பெற்று இருந்தாலும் திசை அதனுடைய ஆதிபத்திய ரீதியான பலன்களை சிறப்பாகவே செய்யும்.
- தசாநாதன் தன் வீட்டிற்கு தன்னுடைய மூலத்திரிகோண வீட்டிற்கு, சஷ்டாஷ்டக மாக மறைந்திருந்து திசை நடத்தும் பொழுது, பாவ கிரகமாக இருந்தால், நிச்சயம் சுபர் தொடர்பு பெற்று இருந்தால் அதனுடைய தீய காரகத்துவங்கள் முற்றிலுமாக தடைபட்டு நல்ல விஷயங்கள் நடைபெறும்.
- குறைந்த அளவிலான சுபர் தொடர்பு பெற்று இருக்கும் பொழுது,அதாவது குறைந்தபட்ச சுபதன்மை பெற்று இருந்தால்,திசையில் கலப்பு பலன்களே கிடைக்கும்.
- ஒரு ராசி சந்தியில் நின்ற கிரகம் தசா நடத்தும் பொழுது, நிச்சயம் அதனுடைய ஆதிபத்தியம் மற்றும் அதை தொடர்பு கொள்ளும் கிரகத்தையும், டிகிரி கணக்கில் ஆராய்ந்து பிறகு சாரநாதனையும் ஆராய்ந்து பலன் சொல்லுதல் அவசியம்.
- இறுதியாக திசை நடத்தும் கிரகத்தின் நவாம்ச நிலை என்ன, ராசியில் பாவ கிரகங்களுடன் தொடர்பு பெற்று நவாம்சத்திலும் பாவ கிரகங்களுடன் இணைந்து இருக்கும் பொழுது, நிச்சயம் திசையின் இறுதியில் திசை சிறப்புக் காது அல்லது சேமிப்பு பொருளாதாரம் மற்ற என்ன ஆதிபத்திய பொருத்து அது சார்ந்த விஷயங்களில் ஜாதகர் பாதிக்கப்படுவார் ..சுபர் தொடர்பு நவாம்சத்தில் பெற்றிருந்து, ராசியில் பெரிய அளவில் சுபத்தன்மை பெறவில்லை எனினும் ஓரளவிற்கு கலப்பு பலன்களை திசை இறுதிப்பகுதியில் கிடைக்கும்.
மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஒரு திசை சிறப்பிக்குமா என்பதை கணிக்கும் சில பொதுவான விதிகள்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1