ஒரு 15 வருடங்களுக்கு முன்பு நமக்கு பிடித்த (Mukesh)திரைப்படங்கள் மற்றும் கார்ட்டூன்களை பிபிஎல் டிவி(BPL TV) டிவிகளில் பார்த்திருப்போம். அதாவது சிறந்த திரை அனுபவத்தை கொடுத்தது இந்த பிபிஎல் டிவி மாடல்கள். குறிப்பாக பிபிஎல் டிவி மாடல் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்தது என்றுதான் கூறவேண்டும்.
கடைசி வாய்ப்பு முந்துங்கள்! சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சிறப்பு சலுகைகளைப் பெற இப்போதே விசாரியுங்கள். மேலும் எல்ஜி, சாம்சங், பானாசோனிக், சோனி என பல நிறுவனங்கள் அதிநவீன டிவிகளை கொண்டுவந்த பின்பு பிபிஎல் டிவிகளின் விற்பனை மெல்ல மெல்ல குறைந்தது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் பிபிஎல் மற்றும் கெல்வினேட்டர் ஆகிய இரு முக்கியமான பிராண்டுகளைக் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக இதன் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையில் இறங்க உள்ளதாக தகவல்வெளிவந்துள்ளது.
அதாவது இப்போது வெளிவந்த தகவலின்படி, ரிலையன்ஸ் ரீடைல் செய்துள்ள ஒப்பந்தம் மூலம் பிபிஎல், கெல்வினேட்டர் ஆகிய இரு இந்திய பிராண்டுகளின் பெயரில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யவும், சந்தைப்படுத்தவும் உரிமம் பெற்றுள்ளது. சீனாவில் இருக்கும் சியோமி, ரியல்மி போன்ற பல நிறுவனங்கள் அதிநவீன ஸ்மார்ட் டிவிகள் உட்பட பல சாதனங்களை இந்தியாவில் விற்பனை செய்துவருகின்றன. இதற்கு போட்டி கொடுக்கும் வகையில் பல எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய திட்மிட்டுள்ளது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம். இனிமேல் பிபிஎல் மற்றும் கெல்வினேட்டர் ஆகிய இரு இந்திய பிராண்டுகளின் கீழ் தயாரிக்கப்படும் பொருட்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்த இரண்டு பிராண்டுகள் மீட்டு எடுப்பது மட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் ரீடைல் மூலம் பிராண்டுகளில் பொருட்களை ஆஃப்லைன் கடைகள் முதல் ஆன்லைன் வரை அனைத்து பிரிவிலும் வர்த்தப்படுத்த முடியும். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ள பிபிஎல் நிறுவனம் ஏசி, பிரிட்ஜ், வாசிங் மெஷின், டிவி உள்ளிட்ட பல பொருட்களை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் வரும் வரவிருக்கும் பண்டிகை காலங்களில் இந்த கூட்டணியில் உருவான பொருட்களை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் ரீடைல். அதேபோல் விரைவில் ஜியோ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதாவது ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி சாதனம் ஆனது வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு இந்த வாரம் இறுதியில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் இரண்டு ஸ்லாட்டுகளிலும் 4 ஜி ஆதரவுடன் இரட்டை சிம் கார்டு ஸ்லாட்டுகளை வழங்க வாய்ப்புள்ளது. குறிப்பாக ஜியோ சிம் கார்டு பயன்படுத்தும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வாய்ஸ் அசிஸ்டண்ட்,மொழி பெயர்ப்பு, ஸ்னாப்சாட், சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது இந்த அட்டகாசமான ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம். மேலும் Jio Phone மற்றும் Jio Phone 2 ஐப் போலன்றி, Jio Phone Next பல வண்ண விருப்பங்களிலும் கிடைக்கும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.