சூரியன் (The sun)அனைத்து உயிர்களுக்கும் ஆத்மகாரகன். பிதுர் காரகன். ஒவ்வொரு உயிருக்கும் செய்யும் திதி தர்ப்பணம் .குறிப்பிட்ட அந்த ஆத்மாவிற்கு சென்று சேர்ப்பவர் சூரியன் ஆவார்.
ஆத்மகாரகன் (The Sun)
இயற்கையில் சூரியன் பாவ கிரகம் ..சுபர் தொடர்பு ஏற்படும் பொழுது குறிப்பாக சுக்கிரனை அஸ்த்தப்படுத்தும் பொழுது குருவை அஸ்தங்க படுத்தும் பொழுதும் ,எப்பொழுதும் சூரியனுடன் இணைந்து பயணிக்கும் புதனை அஸ்தங்கப்படுத்தும் பொழுதும் ,சூரியன் சுபத்தன்மை அடைகிறார்.
குருவின் பார்வை (இங்கே குருவின் ஸ்தான பலத்தை கவனிக்க )சூரியனை சுபத்துவ படுத்துவதுடன் குருவும் பங்க படாமல் இருப்பார் . சூரியனுடன் உச்ச சனி அஸ்தங்கபடும்பொழுது, சுபர் தொடர்பு குருவின் பார்வை பெறவில்லை எனில், சூரியன் தொடர்பான காரகத்துவ உறவுகளில் ஜாதகருக்கு பிரச்சினை உருவாகும் அல்லது கிடைக்காமல் போகும் . பரிவர்த்தனையில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை சூரியன், சனி பரிவர்த்தனை ..சூரியன் கும்பத்தில் இருந்து சனி சிம்மத்தில் இருப்பதும் பெரிய அளவில் யோகத்தை தராது .
சிம்மத்தில் சனி இருப்பது அல்லது கும்பத்தில் சூரியன் நிற்பதும் கூட ஒருவகையில் ஜாதகரின் குடும்பத்தில் பித்ரு காரியங்கள் தடைபட்டு உள்ளதை சுட்டிக் காட்டுவதாகும் . சூரியன் நல்ல நிலையில் ஒரு ஜாதகருக்கு நிற்குமானால்,அதிகாரம், பதவி ,தலைமை தாங்கும் குணம் முதலானவை கிடைக்கும் ..
சூரியனின் தன்மைக்கு ஏற்ப, ஒருவர் நேரடி அரசியலிலும் மறைமுக அரசியலிலும் இருக்க இயலும் . எந்த லக்னமாக இருந்தாலும் சூரியன் தன்னுடைய வீட்டிற்கு ஆறு, எட்டில் மறைந்து நிற்காமல் ,குருவின் வீடுகளில் நின்று அல்லது குரு சுக்கிர தொடர்பு பெற்று இருக்கும் பொழுது மிக மிக அற்புதமான பலன்களைக் கொடுப்பார் .
செவ்வாய் சுபத்துவம் – பதவி வேலை முதலானவை. சனி சுபத்துவம் அடையும்பொழுது — நீச்ச தொழில்களில் லாபம். எந்த லக்னமாக இருந்தாலும் சூரியன் சுப தன்மையுடன் இருந்தால் மட்டுமே ஆட்சி அதிகாரம் , அரசு வேலை போன்றவை ஜாதகருக்கு கிடைக்கும் . வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல சூரியன் ராகு தொடர்பை பெறும் பொழுது சூரியனின் முழுமையான காரகத்துவங்கள் அனைத்தும் அடிபட்டு ராகுவே சூரியனை ஆட்கொள்வார் ..ராகுவின் தன்மைக்கேற்ப பலன்கள் மாறுபடும்.