நடிகை சமந்தா ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை மறுத்தாரா? – நடிகை சமந்தா (Actress Samantha) – நாக சைதன்யா குடும்பத்தினர் ஜீவனாம்சமாக அளிக்க முன்வந்த 200 கோடி ரூபாயை ஏற்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை சமந்தா – Actress Samantha
தென் இந்தியாவில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் ஜோடியாக விளங்கியவர்கள் நாக சைதன்யா மற்றும் சமந்தா தம்பதியர். பல்லாவரத்தை சேர்ந்த சமந்தா நடிப்பில் பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, போன்ற தமிழ் படங்கள் முதலில் வெளிவந்தன. பின்னர் 2010ம் ஆண்டு கவுதம் வாசுதேவமேனன் இயக்கத்தில் “யே மாய சேசாவே” (தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா) என்ற தெலுங்கு படத்தில் நடித்த போது அப்படத்தின் கதாநாயகனான நாக சைதன்யாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இந்தக் காதல் 2017ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. இன்னும் 5 தினங்களில் தங்களின் 4வது திருமண நாளை கொண்டாட இருந்த நிலையில், 4 ஆண்டுகால திருமண வாழ்க்கையை தற்போது ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முறித்துக் கொள்வதாக நாக சைதன்யா, சமந்தா இருவருமே தனித்தனியாக தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் நேற்று அறிவித்திருக்கின்றனர்.
இருவருமே ஒருமித்த கருத்தின் அடிப்படையில் விவாகரத்து விரையில் விண்ணப்பிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமண முறிவையடுத்து சமந்தாவிற்கு ஜீவனாம்சமாக 200 கோடி ரூபாயை, நாக சைதன்யா குடும்பத்தின் சார்பில் தர முன்வந்ததாகவும் அதனை ஏற்க சமந்தா மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாக சைத்தன்யாவின் குடும்பத்திடம் இருந்து ஒரு ரூபாய் கூட தனக்கு வேண்டாம் என்றும், தனது கடின முயற்சியின் மூலம் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்ததாலும், தன்னால் சுயமாக வாழ முடியும் என சமந்தா அந்த 200 கோடி ரூபாய் தொகையை ஏற்க மறுத்ததற்காக காரணமாக தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், தற்போது திருமண முறிவால் மன உளைச்சலில் இருந்து வரும் நிலையிலும், தற்போது அவர் நடித்துவரும் படங்களின் மீது கவனம் செலுத்த இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்களிடமிருந்து தகவல் வெளியாகி உள்ளது. தினமும் படப்பிடிப்புக்கு செல்வது, கடினமாக ஒன்று என்ற போதிலும், தன்னால் யாருக்கும் நஷ்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் சமந்தா உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
For More informative Videos go to Ariviyalpuram