சென்னை தியாகராய நகரில் நடிகர் வடிவேலு (Actor Vadivelu) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வடிவேலு கூறுகையில், எனக்கு ஏற்பட்ட துன்பம் போன்ற துன்பத்தை வேறு யாரும் அனுபவிக்கமுடியாது.
என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி அடித்தது. கொரோனோ காலகட்டத்தில் என்னுடைய காமெடியை பார்த்து மக்கள் மகிழ்ச்சியடைந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். கொரோனா வந்தபிறகு என் பிரச்னை சாதாரணமாக சென்றுவிட்டது. முதல்வரை சந்தித்துவிட்டு வந்தபின் எனக்கு எல்லாம் நல்லதாக நடைபெற்றது. விவேக் என் அருமையான நண்பன், அவரது மறைவு பெரும் வேதனையை தந்தது. அவர் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1