மும்பை, மார்ச் 19 – ஜப்பான் பிரதமர் (Japan investment in India) ஃபுமியோ கிஷிடா, புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 5 டிரில்லியன் யென் (42 பில்லியன் டாலர்) முதலீடு செய்யப்படும் என்று சனிக்கிழமை அறிவித்தார்.
உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் பாதுகாப்பை பலப்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை மேம்படுத்தவும் இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். சமீபத்திய ஆண்டுகளில் ஜப்பான் இந்தியாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அதன் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அதிவேக இரயில்வேயை ஆதரித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில், அப்போதைய ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, இந்தியப் பயணத்தின் போது ஐந்து ஆண்டுகளில் 3.5 டிரில்லியன் யென் முதலீடு மற்றும் நிதியுதவியை அறிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1